உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தினமலர்- பட்டம் இதழ் மெகா வினாடி வினா போட்டி புதுச்சேரியில் நாளை நடக்கிறது

தினமலர்- பட்டம் இதழ் மெகா வினாடி வினா போட்டி புதுச்சேரியில் நாளை நடக்கிறது

புதுச்சேரி : புதுச்சேரி 'தினமலர் நாளிதழ்' பட்டம் இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல், பரிசு வெல்' என்ற மெகா வினாடி வினா போட்டி, நாளை (28ம் தேதி) ஜிப்மர் வளாகத்தில் உள்ள அப்துல்கலாம் ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டத்தில் உள்ள 150 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளி அளவிலான வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. 35,000 மாணவர்கள் பங்கேற்றனர்.ஒவ்வொரு பள்ளியிலும், முதல் நிலை தேர்வு நடத்தி அதிக மதிப்பெண் பெற்ற் 16 பேர், இரண்டாம் கட்ட போட்டிக்கு தேர்வாகினர். அவர்கள், தலா இருவர் வீதம் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு இரண்டாம் கட்ட வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.பள்ளி அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த 300 அணிகள், அணிக்கு தலா 2 மாணவர்கள் வீதம் 600 மாணவ மாணவிகள் நாளை நடக்கும் மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க உள்ளனர்.காலை 7:35 மணி முதல் மாணவர் வருகை பதிவுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. அதைத் தொடர்ந்து, வினாத்தாள் வழங்கப்பட்டு முதற்கட்ட எழுத்து தேர்வு நடக்கவுள்ளது. இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர் கொண்ட 8 அணிகளுக்கு இறுதி சுற்று போட்டி நடத்தப்படும்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், தேசிய மனித உரிமைகள் ஆணைய நீதிபதி ராமசுப்ரமணியன், ஆச்சார்யா கல்வி குழுமத்தின் தலைவர் அரவிந்தன் ஆகியோர் பரிசு வழங்கி சிறப்புரையாற்றுகின்றனர்.மெகா வினாடி வினா போட்டிக்கு தேர்வான பள்ளி மாணவ மாணவிகள் காலை 7:30 மணிக்கு முன்னதாக நிகழ்ச்சி இடத்திற்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை