| ADDED : செப் 30, 2011 01:56 AM
புதுச்சேரி : திருக்காமீஸ்வரர் கோவிலில் நவராத்திரி திருவிழா
துவங்கியது.வில்லியனூரில், 2000 ஆண்டுகள் பழமையான, திருக்காமீஸ்வரர் கோவில்
அமைந்துள்ளது. இங்கு, 10 நாள் நவராத்திரி திருவிழா துவங்கி நடந்து
வருகிறது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் கொலு கண்காட்சி
வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி திருவிழாவில் தினமும் யாகம் வளர்த்து,
சகஸ்ரநாமம் வாசித்து, லட்சார்ச்சனையும், கோகிலாம்பிகை, துர்க்கை, பிடாரி
அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. நவராத்திரி திருவிழாவின்
10வது நாளான அக்டோபர் 6ம் தேதி, வித்யா விருத்தி யாகம், அம்பு போடும்
திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி மனோகர்
மற்றும் கோவில் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.