உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கலந்துரையாடல் நிகழ்ச்சி

கலந்துரையாடல் நிகழ்ச்சி

புதுச்சேரி : புதுச்சேரி அகில பாரதிய நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில், திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள ஒயிட் ஏஞ்சல்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, புகழ்முருகன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் அய்யப்பன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் நோக்கவுரையாற்றினார். ஜெயமாரிமுத்து, திலகவதி, ஜெயசுதா, திவ்யா, தாட்சாயணி முன்னிலை வகித்தனர்.பொதுச்செயலாளர் விஸ்வேஸ்வரன் திறன் மேம்பாடு குறித்தும், இணை ஒருங்கிணைப்பாளர் பிரதாபன் எரிவாயு சம்பந்தமான குறை தீர்வு குறித்தும் பேசினர். தொடர்ந்து விவேகானந்தரின் பிறந்தநாள் விழா சமர்ப்பன தினமாக கொண்டாடப்பட்டது. மனநல மருத்துவர் வெங்கட்ரங்கன் சமர்ப்பண தினம் குறித்து பேசினார்.நிகழ்ச்சியில், தொழில் துவங்குவது, வங்கிகளில் கடன் வாங்குவது, வேலைக்கான திறன்களை வளர்ப்பது குறித்து கலந்துரையாடல் நடந்தது. செந்தில்குமார், பாலன், முனியப்பன், வெற்றிச்செல்வன், சிவராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.இணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ