மேலும் செய்திகள்
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
19 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
19 hour(s) ago
அரசு பள்ளியில் கழிவறை திறப்பு
19 hour(s) ago
வாய்க்கால் அமைக்கும் பணி
19 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான, ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி மேற்கு அணி வெற்றி பெற்றது.கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம்., நிறுவனம் இணைந்து நடத்தும், புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி கடந்த, 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.இதில், புதுச்சேரி வடக்கு, புதுச்சேரி தெற்கு, புதுச்சேரி மேற்கு, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் என ஆறு அணிகள் பங்குபெற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றன. இந்த போட்டிகள், பேன்கோடு ஆப்பில், நேரலையாக ஒளிபரப்பாகிறது.நேற்று மதியம் 3:00 மணிக்கு நடந்த போட்டியில், புதுச்சேரி மேற்கு அணி மற்றும் மாகி அணிகள் மோதின. இந்த போட்டியில் 'டாஸ்' வென்று மாகி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் ஆடிய மாகி அணி, 20 ஓவர் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் அடித்தது. அந்த அணியை சேர்ந்த ஷஹீர், 32 பந்துகளில் 54 ரன்களும், சஜு சோதன் 23 பந்துகளில் 22 ரன்களும் அடித்தனர்.அடுத்து களம் இறங்கிய, புதுச்சேரி மேற்கு அணி, 19 ஓவர்களிலேயே, 7 விக்கெட்டுகளை இழந்து, 142 ரன்கள் அடித்தது. இதன் மூலம் அந்த அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.புதுச்சேரி மேற்கு அணியின் சதீஷ், 22 பந்துகளில் 39 ரன்களும், தேஷ் தீபக் 14 பந்துகளில் 27 ரன்களும் அடித்தனர். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சதீஷூக்கு, ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago