மேலும் செய்திகள்
ரகளை செய்த வாலிபர் கைது
06-Jan-2026
நெட்டப்பாக்கம்: பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் . நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பனையடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சாக்ரடீஸ் 25, என்பவர், மதுபோதையில் பண்டசோழநல்லுார் சாராயக்கடை எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். அப்போது சென்ற போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
06-Jan-2026