உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மண்ணாடிப்பட்டு தொகுதியில் தீபாவளி தொகுப்பு வழங்கல்

மண்ணாடிப்பட்டு தொகுதியில் தீபாவளி தொகுப்பு வழங்கல்

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி, திருக்கனுாரில் அரசு மூலம் தீபாவளி பரிசு தொகுப்புகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கி துவக்கி வைத்தார். தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு மூலம் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 585 ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மண்ணாடிப்பட்டு தொகுதி, திருக்கனுாரில் தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகளை வழங்கினார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., பிரமுகர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ