மா இலை ஆர்கானிக் விற்பனையகத்தில் தீபாவளி சிறப்பு காம்போ பேக் விற்பனை துவக்கம்
புதுச்சேரி: மா இலை ஆர்கானிக் விவசாயிகளின் நேரடி விற்பனையகம், தீபாவளியையொட்டி, சிறப்பு 'காம்போ பேக்' விற்பனையை துவக்கி உள்ளது.புதுச்சேரி, இ.சி.ஆர் மற்றும் கேண்டீன் தெருவில், மா இலை ஆர்கானிக் விவசாயிகள் விற்பனையகத்தில் பல்வேறு வகையான இனிப்புகள் மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தீபாவளியையொட்டி, தற்போது 'காம்போ பேக்' விற்பனை துவங்கியுள்ளது. இந்த சிறப்பு விற்பனையை, மா இலை விற்பனையக நிறுவனர் மித்ரா நேற்று துவக்கி வைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது: தரமான பொருட்களை பயன்படுத்தி, வீட்டில் செய்வதை போன்ற, ருசியான இனிப்புகள் மற்றும் கார வகைகளை தயாரித்து, வழங்குகி வருகிறோம். இதில் இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்படும், அரிசி, சிறுதானியங்கள், உலர் பழங்கள், வெல்லம் நாட்டுச்சர்க்கரை மற்றும் கடலை எண்ணெய், நெய் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.இந்த 'காம்போ பேக்' ரூ.300,ல் இருந்து துவங்கி, ரூ.2 ஆயிரத்து 300 வரை விற்கப்படுகிறது.எங்கள் சொந்த வயல், பண்ணைகள் மற்றும் நம்பகமான இயற்கை முறை விவசாயிகளிடம் இருந்து இயற்கை உட்பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், பரிசாக இந்த 'காம்போ'வை பகிர்ந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு, 9600042507, 9043991051 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.