உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  உருளையன்பேட்டை தொகுதியை முன்னேற்றுவேன் தி.மு.க., வேட்பாளர் கோபால் உறுதி

 உருளையன்பேட்டை தொகுதியை முன்னேற்றுவேன் தி.மு.க., வேட்பாளர் கோபால் உறுதி

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தொகுதியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வேன் என, தி.மு.க., வேட்பாளர் கோபால் உறுதி அளித்தார். உருளையன்பேட்டை தொகுதியில் 2021ல் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், அமைப்பாளர் சிவா வழிகாட்டுதலுடன் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருவதால், தொகுதி மக்களிடையே கோபாலுக்கு நல்ல பெயர் உள்ளது. இந்நிலையில், 2வது முறையாக உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் கோபால் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, உருளையன்பேட்டை தொகுதி சஞ்சய்காந்தி நகர், குபேர் நகர், அய்யனார் நகர் பகுதிகளில் நேற்று தி.மு.க., வேட்பாளர் கோபால் வீடு, வீடாக சென்று 'உதயசூரியன்' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது, தி.மு.க., வேட்பாளர் கோபாலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இப்பகுதிக்கு சுகாதாரமான குடிநீர், மழைநீர் வடிகால் வசதி, உப்பனாறு வாய்க்காலை மேம்படுத்தி மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் தடுப்பது உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து, உருளையன்பேட்டை தொகுதியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வேன் என, உறுதி அளித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். தொகுதி செயலாளர் சக்திவேல், சத்யா, கிருஷ்ணன், ஜெயராமன், ஞானமூர்த்தி, வெங்கட், கஸ்துாரி, சுகுமார், மனோகர், சரவணன், அறிவழகன், சங்கர், வேலு, சித்ரா, லட்சுமி, கங்காதரன், முத்து மற்றும் இண்டி கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை