உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தி.மு.க. மாணவரணி உறுப்பினர் சேர்க்கை

தி.மு.க. மாணவரணி உறுப்பினர் சேர்க்கை

பாகூர்: புதுச்சேரி தி.மு.க., சார்பில், இல்லம் தோறும் மாணவர் அணி என்ற நோக்கில், மாநிலம் முழுவதும் மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகூர் தொகுதியில் மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்க நிகழ்ச்சி காட்டுக்குப்பதில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாநில பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநில மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் மணிமாறன், மாநில துணை அமைப்பாளர் கீர்த்தி எழினி ஆகியோர் முன்னின்று முகாமினை நடத்தினர். இந்நிகழ்ச்சியில், தி.மு.க., மாநில, தொகுதி, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை