உள்ளூர் செய்திகள்

டிரைவர் மாயம்

புதுச்சேரி: வெளியூருக்கு சவாரி சென்ற டிரைவர் மாயமானது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பை சேர்ந்தவர் ஜெயபதி, 35; கார் டிரைவர். கடந்த 11ம் தேதி, வெளியூருக்கு சவாரி செல்வதாக, அவரது மனைவியிடம் கூறி விட்டு சென்றார். 5 நாட்கள் ஆகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. மொபைல் போனும், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் விசாரித்தும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை