போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி
புதுச்சேரி: மிஷன் வீதி வ.உ.சி., மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி பொறுப்பாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். விரிவுரையாளர் ஹேமாலட்சுமி வரவேற்றார். புதுச்சேரி மகப்பேறு மருத்துவமனை மருத்துவ அதிகாரி கிஷோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினார். பொறுப்பாசிரியர் பத்மாவதி பரிசு வழங்கினார். விரிவுரையாளர் கந்தசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் எட்வர்டு சார்லஸ், அன்பழகன், டேவிட் போல் செய்திருந்தனர். ஆசிரியர் முருகேச பாரதி நன்றி கூறினார்.