வில்லியனுாரில் போதை மீட்பு விழிப்புணர்வு சிகிச்சை முகாம்
புதுச்சேரி: வில்லியனுாரில் போதை மீட்பு சிகிச்சை முகாம் நடந்தது.வில்லியனுார், ஆரம்ப சுகாதார நிலையத்தில், சமூக நலத்துறை மற்றும் பாரத மாதா ஒருங்கிணைந்த மதுபோதை சிகிச்சை மறுவாழ்வு மையம் இணைந்து, போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாமை நேற்று நடந்தது. மதர் அறக்கட்டளை தலைவர் கோபால் வரவேற்றார். எதிர்க்கட்சி தலைவர் சிவா குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து, போதை பழக்கத்தில் இருந்து மீள சிகிச்சை பெற முகாமிற்கு வந்தவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் துணை கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் கோட்டாரு, வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ கண்காணிப்பு அதிகாரி பாமகள் கவிதை, திட்ட ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.