உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிபோதையில் ரகளை: 2 பேர் கைது

குடிபோதையில் ரகளை: 2 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முதலியார்பேட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காண்டீபன் நேற்று முன்தினம் நுாறடி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குடிபோதையில் ரகளையில் ஈடுப்பட்டிருந்த, புதுச்சேரி, தினகரன் மகன் சங்கர், 47; முதலியர்பேட்டை ஒத்தவாடை வீதியில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டிருந்த பாரதிமில் திட்டு, ஆரோக்கிய சாமி மகன், டொமினிக், 42; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை