உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

புதுச்சேரி : மின் நுகர்வோர் குறை தீர்வு முகாம் வரும்30ம் தேதி நடக்கிறது.மின்துறை செயற்பொறியாளர் செய்திக்குறிப்பு:வெங்கட்டா நகர், முத்தியால்பேட்டை, சாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் 30ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 12.30 மணி வரை, காமராஜ் சாலை, பாலாஜி தியேட்டர் எதிரில் உள்ள பத்மினி மகாலில் மின் நுகர்வோர் குறைதீர்வு முகாம் நடக்கிறது.துப்புரயாப்பேட் முதல் எஸ்.வி. பட்டேல் சாலைக்குட்பட்ட பகுதிகள், கடற்கரை சாலை முதல் கோவிந்த சாலைக்குட்பட்ட பகுதிகளுக்கு வரும் 31ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை மின்துறை தலைமை அலுவலகம் வளாகம், இளநிலை கணக்கு அதிகாரி, வருவாய் அலுவலகங்களிலும் குறைதீர் முகாம் நடக்கிறது.முருங்கப்பாக்கம், முதலியார்பேட்டை மற்றும் நகர மேற்கு பிரிவை சேர்ந்த அண்ணா நகர், நடேசன் நகர், நெல்லித்தோப்பு மற்றும் உருளையான்பேட்டை உட்பட்ட பகுதிகளுக்கு வரும் 2ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை, கடலுார் சாலையில் உள்ள மரப்பாலம் துணை மின் நிலைய வளாகத்தில் குறைதீர்வு முகாம் நடக்கிறது.மேற்கண்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், மின்துறை சம்மந்தமான குறைகள் இருப்பின், முகாமில் கலந்து கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ