உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் நுகர்வோர்குறை தீர்வு முகாம்; நிலுவை தொகை வசூலிக்க வலியுறுத்தல்

மின் நுகர்வோர்குறை தீர்வு முகாம்; நிலுவை தொகை வசூலிக்க வலியுறுத்தல்

புதுச்சேரி : அரசு மின் துறைக்கு அளிக்க வேண்டிய ரூ. 400 கோடி நிலுவை தொகையை வசூலிக்க வேண்டும் என மின் நுகர்வோர் குறை தீர்வு முகாமில் வலியுறுத்தப்பட்டது.புதுச்சேரி மின்துறையில் ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை மின்துறை இயக்குதல் பராமரிப்பு அலுவலகம் மூலம் அந்தந்த பகுதி மின் நுகர்வோர் குறை தீர்வு முகாம் நடத்தப்பட வேண்டும்.அதன்படி, நகர பிரிவு இயக்குதல் மற்றும் பராமரிப்பு சார்பில் மின் நுகர்வோர் குறைதீர்வு முகாம், பாலாஜி தியேட்டர் எதிரில் உள்ள பத்மினி அரங்கில் நேற்று நடந்தது.மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன், உதவி பொறியாளர் திலகராஜ் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.நேரு எம்.எல்.ஏ., மற்றும் பெற்றோர் மாணவர் சங்க தலைவர் பாலா உட்பட பலர் மனு அளித்தனர்.இதில், புதுச்சேரியில் ஸ்மார்ட் மீட்டர்களைபிரீபெய்ட் மீட்டர்களாக மாற்ற கூடாது. தேர்வு நேரத்தில் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். அரசு தர வேண்டிய ரூ. 400 கோடி நிலுவை தொகையை வசூல் செய்ய வேண்டும். நிலுவை தொகையை நுகர்வோர் மீது திணிக்க கூடாது என மின் நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ