மின் கட்டணத்தை திரும்ப பெற இ.கம்யூ., வலியுறுத்தல்
புதுச்சேரி: இந்திய கம்யூ., புதுச்சேரி மாநிலக்குழு கூட்டம் மூலக்குளம் தனியார் மண்டபத்தில் அன்பழகன் தலைமையில் நடந்தது. விடுதலை நாளையொட்டி, தேசியக்கொடியை கட்சியின் கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜீவானந்தம், கட்சி கொடியை நிர்வாக குழு உறுப்பினர் நாரா கலைநாதன் ஏற்றினர். மாநில செயலாளர் சலீம், எதிர்கால அரசியல் நிலை குறித்து பேசினார். தேசியக் குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில பொருளாளர் சுப்பையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் சேது செல்வம், அந்தோணி, எழிலன், மாநிலக் குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, முருகன், ஹேமலதா உட்பட பலர் பங்றனர். இதில், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அரசு துறை உயரதிகாரிகளின் மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். சைபர் கிரைம் போலீசில் பதிவான வழக்குகளில் இதுவரை யாருக்கும் தண்டனை கிடைக்கவில்லை. லஞ்சம் வாங்கியதாக இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பின்னால் உள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பிரிபெய்டு மின் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.