உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.சி.ஆர்., சென்டர் மீடியனில் பேனர் திருமண கோஷ்டி மீது வழக்கு பதிவு

இ.சி.ஆர்., சென்டர் மீடியனில் பேனர் திருமண கோஷ்டி மீது வழக்கு பதிவு

புதுச்சேரி: இ.சி.ஆரில் தடையை மீறி பேனர் வைத்ததிருமண கோஷ்டிகள் மீது லாஸ்பேட்டை மற்றும் கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரியில் தடையை மீறி பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் பேனர் வைப்பது குறைந்து வரும் நிலையில், திருமண மண்டபங்களில் நடக்கும் திருமணம், வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்று மின் கம்பங்களிலும், சென்டர் மீடியன்களில் வரிசையாக பேனர் கட்டுகின்றனர்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு இ.சி.ஆரில் கொக்குபார்க் துவங்கி லதா ஸ்டீல் ஹவுஸ் வரையிலான சென்டர் மீடியனில் திருமண கோஷ்டியினர் திருமண வரவேற்பு பேனர்களை கட்டி வைத்திருந்தனர். இது தொடர்பாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். இதுபோல் லாஸ்பேட்டை இ.சி.ஆர்., மடுவுபேட் முதல் கல்பனா மகால் வரை, சாலை சென்டர் மீடியனில் திருமண வரவேற்பு பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவி பொறியாளர் ஜெயராஜ் புகார் அளித்தார். லாஸ்பேட்டை போலீசார் பேனர் வைத்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது புதுச்சேரி நகர திறந்தவெளி அழகு சீர்கெடுக்கும் பிரிவு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை