| ADDED : பிப் 07, 2024 11:16 PM
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் மக்கள் நல இயக்கத்தின் சார்பில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான 'வென்று காட்டுவோம்' கல்வி நிகழ்ச்சி மல்லிகா திருமண நிலையத்தில் நடந்தது.நிறுவனத் தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் திருமலை வரவேற்றார். இயக்க பொறுப்பாளர்கள் பரசுராமன், விஜயவீரன், சத்தியநாதன், ராமமூர்த்தி, ரமேஷ், பிரபாகரன், குமரவேல், முருகன், குமரன், மகளிர் அணி அஸ்வினி முன்னிலை வகித்தனர். ஆலோசகர் வேல்முருகன் விழாவை துவக்கி வைத்தார். விழாவில் பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் சபாபதி ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர். முருங்கப்பாக்கம் திரதிவுபதியம்மன் கோவில் முன்னாள் அறங்காவல் குழுத் தலைவர் ராமகிருஷ்ணன், முருங்கப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மேலாளர் கிருஷ்ணராஜ், ஓய்வு பெற்ற அரசு பள்ளி துணை முதல்வர் கதிர்வேல் பங்கேற்று பேசினர்.பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் கலைவாணி, தட்சிணாமூர்த்தி, சுப்ரமணியன், ஜார்ஜ் பெர்னான்டஸ், முருகன் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.அரசு, தனியார் பள்ளிகளைச்சேர்ந்த 300க்குக்மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, பயனடைந்தனர். மாணவர்களுக்கு தேர்வுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.