மேலும் செய்திகள்
சுருட்டப்பள்ளியில் ஏகதின வில்வ லட்சார்ச்சனை
10-Dec-2024
புதுச்சேரி : புதுச்சேரியில் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்த ஏக தின லட்சார்ச்சனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உள்ளது. இங்கு ஜூவாலா, அகோபில, மாலோல, வராக உள்ளிட்ட, 11 நரசிம்மர்களாய் சுவாமி அருள்பாலித்து வருகிறார். கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், நரசிம்ம பெருமாள் தன்னுடைய மூன்றாவது கண்ணை திறந்து பார்ப்பதாக ஐதீகம். இந்நிலையில், இக் கோவிலில் நேற்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை, நரசிம்ம சகஸ்ரநாம அர்ச்சனை, ஏக தின லட்சார்ச்சனை நடந்தது. இந்த சகஸ்ரநாம அர்ச்சனையில் கலந்து கொண்டவர்களுக்கு, நவ நரசிம்மர் உருவப்படம், தோத்திர புத்தகம், ரட்சை, துளசி மற்றும் குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.
10-Dec-2024