உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்; முதியவர் கைது

பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்; முதியவர் கைது

புதுச்சேரி: பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜெயரட்சகன், 70. இவர், கடந்த சில நாட்களுக்கு லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண் வீட்டு வாசலில் கோலம் போடும்போது, குடிபோதையில் உரசி செல்வதும், ஆபாச சைகை காட்டி,அரைநிர்வாணமாக நின்று ஆசைக்கு இனங்க அழைப்பு விடுத்தார். அப்பெண் எங்கு சென்றாலும், பின்தொடர்ந்து சென்று ஜெயரட்சகன் டார்ச்சர் கொடுத்துள்ளார்.இதனை அப்பெண் கண்டித்தபோது, உன் கணவரிடம் விஷயத்தை கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.பாதிக்கப்பட்ட பெண் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஜெயரட்சகனை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை