உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேர்தல் ஆலோசனை கூட்டம்

தேர்தல் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி நாதன் அறக்கட்டளை சார்பில், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் சாமிநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கிளை வாரியாக தேர்தல் பணி குறித்து விவாதிக்கப்பட்டது.நிர்வாகிகள் முருகன், வெங்கடேசன், நடராஜன், சத்தியமூர்த்தி, ஆறுமுகம், சுரேஷ், கங்கை அமரன், சுப்ரமணி, ஜெகதீசன், ஆனந்த், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், நிறுவனர் சாமிநாதன் பேசியதாவது; சட்டசபையில் குப்பை வரியை ரத்து செய்வதாக கூறிய அரசு இதுவரையில் ரத்து செய்யவில்லை. மாறாக, குப்பை, கூடுதல் மின்சாரம், சொத்து, தொழில், பாதாள சாக்கடை, குடிநீர் போன்ற வரிகளைமக்கள் மீது திணித்துள்ளது. ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத மாநிலமாக புதுச்சேரி உருவாகிவிட்டது. அதற்கு பதில், காங்., என்.ஆர்.காங்., அரசுவீதிக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல், கோவில், பள்ளி, மக்கள் குடியிருப்பு பகுதிகளில் மதுபான கடை, ரெஸ்டோ பார்களை திறந்துள்ளது. புதுச்சேரியில் இலவசத்தை மட்டுமே அளித்து மக்களின் ஆசையை துாண்டி ஆட்சியமைத்து, எந்த முன்னேற்றமும் இல்லாமல் குறுகிய வட்டத்தில் சுருக்கிய நபர்களை மக்கள் வரும் தேர்தலில் புறக்கணித்துபுதிய அரசை உருவாக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை