உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எலக்ட்ரிஷியன் துாக்குபோட்டு தற்கொலை

எலக்ட்ரிஷியன் துாக்குபோட்டு தற்கொலை

புதுச்சேரி : புதுச்சேரி சண்முகாபுரம், வடக்கு பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டி (எ) இளங்கோ, 48; எலக்ட்ரிஷியன். குடிப்பழக்கம் உடையவர். வேலைக்கு செல்லவில்லை. உடல்நிலை சரியில்லாததால், சில மாதத்திற்கு முன்பு துாக்போட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். அவரது மனைவி தமிழ்செல்வி காப்பாற்றினார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வி வேலைக்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த பழனியாண்டி துாக்கு போட்டுக்கொண்டார்.பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவரது மகன் தந்தை துாக்கில் தொங்குவதை பார்த்து கூச்சலிட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பழனியாண்டியை மீட்டு ஜிப்மருக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலே இறந்தார். கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ