உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்துறை ஊழியர்களின் கூட்டுறவு வீட்டு வசதி சங்க குழுக் கூட்டம்

மின்துறை ஊழியர்களின் கூட்டுறவு வீட்டு வசதி சங்க குழுக் கூட்டம்

புதுச்சேரி; மின்துறை ஊழியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் குழு கூட்டம் நடந்தது.புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு, 2025-28ம் ஆண்டிற்கான இயக்குனர் குழு தேர்தல், கடந்த மார்ச் 22ம் தேதி நடந்தது. இதில், மின்துறை கூட்டு நடவடிக்கை குழு அமைப்பின் சார்பில், போட்டியிட்ட 5 பேர் வெற்றி பெற்றனர். அதில், இயக்குனர்களின் குழு தலைவராக சுரேஷ்குமார், துணைத் தலைவராக ராம்மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, பதவி ஏற்றுக் கொண்டனர்.புதிய இயக்குனர்கள் குழு முதல் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்தில், அன்பழகன், ராஜவேல், ஆதிகேசவன், பிரபு, பாலமுருகன், சுந்தர்ராஜன், சிவகுரு, செந்தில் முருகன் உட்பட நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்.கூட்டத்தில், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், புதிய வீட்டு மனைகள் ஏற்படுத்தி, உறுப்பினர்களுக்கு வழங்குவது, வங்கி கணக்கு விவரங்களை கையாளுவதற்கு இயக்குனர், ராஜவேலு நிர்வாகியாக நியமனம் செய்து, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை