உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவர் பணியிடங்களை நிரப்ப மதிப்பீட்டுக்குழு வலியுறுத்தல்

மருத்துவர் பணியிடங்களை நிரப்ப மதிப்பீட்டுக்குழு வலியுறுத்தல்

புதுச்சேரி சுகாதாரத்துறையில் காலிபணியிடங்களை விரைந்து நிரப்பிட சட்டசபை மதிப்பீட்டுக்குழு வலியுறுத்தி உள்ளது.புதுச்சேரி சட்டசபையின் மதிப்பீட்டு குழு கூட்டம் சபாநாயகர் செல்வம் முன்னிலையில் மதிப்பீட்டு குழு தலைவர் நாஜிம் தலைமையில் நேற்று காலை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது.கூட்டத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதில், காலியாக உள்ள மருத்துவர் உள்ளிட்ட சுகாதார பணியிடங்களை உடனடியாக நிரப்புவது, போதுமான மருந்துகளை கையிருப்பு மற்றும் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர குழு உறுப்பினர்கள், வலியுறுத்தினர்.கூட்டத்தில், முதல்வரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், சம்பத், கல்யாணசுந்தரம், நேரு, வைத்தியநாதன், ராமலிங்கம், நாக தியாகராஜன், செந்தில்குமார், பிரகாஷ் குமார், நிதித்துறை செயலர் முத்தம்மா, சட்டசபை செயலர் தயாளன், சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி