உள்ளூர் செய்திகள்

ஊழியர் தற்கொலை

புதுச்சேரி: மூட்டு வலியால் அவதிப்பட்ட தனியார் கம்பெனி ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 58, தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு மூட்டுவலி இருந்தாதல் அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மூட்டுவலியால் அவதிப்பட்ட ஆறுமுகம், இவரது அறையில் உள்ள மின்விசிறியில் தனது மனைவியின் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் வேலு கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை