உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாக்காளர் தின கட்டுரை போட்டிக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

வாக்காளர் தின கட்டுரை போட்டிக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

புதுச்சேரி : தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இந்திய தேர்தலுக்கான தேர்தல் முறை என்ற தலைப்பில் வரும் 27ம் தேதி கட்டுரை போட்டி நடக்கின்றது.இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தலைவர் தனபால் செய்திக்குறிப்பு:தேசிய வாக்காளர் தினம் ஆண்டு தோறும் ஜனவரி 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் புதுச்சேரி கிளை அலுவலகத்தில் வரும் 27ம் தேதி இந்திய தேர்தலுக்கான நிர்வாக முறை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.கருத்தரங்கின் ஒரு பகுதியாக கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடத்தி, பரிசு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதில் அனைத்து கல்லுாரி மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.கட்டுரையை இந்திய தேர்தல் முறை, இந்திய தேர்தல் செயல் முறை, இந்திய தேர்தல் வரலாறு ஆகிய ஏதேனும் ஒரு தலைப்பில் ஏ-4 தாளில் 2 பக்கத்திற்கு மிகாமல் எழுதி வரும் 25ம் தேதிக்குள் gmail.comஎன்ற இ-மெயிலில் அனுப்ப வேண்டும். கட்டுரைகள் 350 முதல் 500 வார்த்தைகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை