உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மதுக்கடைகளுக்கு ஒரே வழி: கலால் துறை அதிரடி உத்தரவு

 மதுக்கடைகளுக்கு ஒரே வழி: கலால் துறை அதிரடி உத்தரவு

புதுச்சேரி: மதுக்கடைகள் மற்றும் பார்களில் முன் அனுமதியின்றி மாற்றங்கள் செய்யக்கூடாது என, கலால் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து கலால் துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் விடுத்துள்ள சுற்றறிக்கை புதுச்சேரி கலால் சட்ட விதிகளின்படி மதுக்கடைகள் மற்றும் பார்களுக்கு ஒரே நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழி மட்டுமே இருக்க வேண்டும். எனவே, மதுக்கடைகளுக்கு பல நுழைவு வாயில்கள் வைப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. மதுக்கடைக்கு உரிமம் பெற்ற வளாகத்தில் உள்ள கட்டமைப்பை மாற்றுவதோ அல்லது சில்லறை விற்பனைக்கூடம் மற்றும் சேவை பகுதிகளை இடமாற்றம் செய்வதாக இருந்தால், உரிமம் வழங்கிய அதிகாரியிடம் முன் அனுமதி பெற்ற பிறகே செய்ய வேண்டும். மீறினால் உரிமத்தை ரத்து செய்வது அல்லது இடை நிறுத்துதல் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ