உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி விமான சேவை ராஜமுந்திரி வரை நீட்டிப்பு இன்று முதல் அமல்

புதுச்சேரி விமான சேவை ராஜமுந்திரி வரை நீட்டிப்பு இன்று முதல் அமல்

புதுச்சேரி: புதுச்சேரி விமான சேவை ஹைதராபாத் வழியாக ராஜமுந்திரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 74 பேர் செல்லக்கூடிய ஏ.டி.ஆர்., விமான சேவை இயங்கி வருகிறது. பெங்களூருவில் இருந்து பகல் 11:45 மணிக்கு புதுச்சேரி வரும் விமானம், இங்கிருந்து 12:10 மணிக்கு ஹைதராபாத் செல்கிறது. அங்கிருந்து மாலை 4:45 மணிக்கு புதுச்சேரிக்கு வந்து, மீண்டும் மாலை 5:10 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இந்நிலையில், இன்று (26ம் தேதி) முதல் புதுச்சேரி விமான சேவை ஹைதராபாத் வழியாக ராஜமுந்திரி வரை நீட்டிக்கப்படுகிறது. இதுகுறித்து புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இனி, வாரத்தின் அனைத்து நாட்களிலும் புதுச்சேரியிலிருந்து ராஜமுந்திரிக்கு, ஹைதராபாத் வழியாக விமான சேவை இயக்கப்படும். இது, இன்று (26ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. இந்த விமான சேவை, பயணிகள் வசதியை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. புதுச்சேரியின், ஏனாம் பிராந்தியத்திற்கு செல்லும் அரசு அதிகாரிகள் மற்றும் பயணிகளுக்கு இது வரப்பிரசாதமாக அமையும். புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றும். புதுச்சேரி அதிகாரிகளுக்கு எப்படி கைகொடுக்கும் ஏனாம் பிராந்தியத்திற்கு செல்ல, தற்போது சென்னை சென்று அங்கிருந்து ராஜமுந்திரிக்கு விமானத்தில் செல்ல வேண்டும். இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து ராஜமுந்திரிக்கு விமான சேவை ஹைதராபாத் வழியாக நீட்டித்திருப்பது, புதுச்சேரி அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். புதுச்சேரியில் இருந்து ராஜமுந்திரி வரை விமானத்தில் சென்று, அங்கிருந்து 1:30 மணி நேரம் பயணித்து ஏனாமிற்கு சென்றிடலாம். -------------------------------------- புதுச்சேரி விமான சேவையின் புதிய அட்டவணை --------------------------------------- புறப்படும் இடம் நேரம் சேரும் இடம் நேரம் ராஜமுந்திர் காலை 10:05 ஹைதராபாத் காலை 11:20 ஹைதராபாத் காலை 11:50 புதுச்சேரி மதியம் 1:45 புதுச்சேரி பகல் 2.05 பெங்களூரு மாலை 3.30 பெங்களூரு மாலை 3.55 புதுச்சேரி மாலை 5.20 புதுச்சேரி மாலை 5.40 ஹைதராபாத் இரவு 7.25 ஹைதராபாத் இரவு 7.55 ராஜமுந்திரி இரவு 9.10 ---------------------------------------- புதுச்சேரி அதிகாரிகளுக்கு எப்படி கைகொடுக்கும் ஏனாம் பிராந்தியத்திற்கு செல்ல, தற்போது சென்னை சென்று அங்கிருந்து ராஜமுந்திரிக்கு விமானத்தில் செல்ல வேண்டும். இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து ராஜமுந்திரிக்கு விமான சேவை ஹைதராபாத் வழியாக நீட்டித்திருப்பது, புதுச்சேரி அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். புதுச்சேரியில் இருந்து ராஜமுந்திரி வரை விமானத்தில் சென்று, அங்கிருந்து 1:30 மணி நேரம் பயணித்து ஏனாமிற்கு சென்றிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை