உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீசாருக்கான கண் பரிசோதனை முகாம்

போலீசாருக்கான கண் பரிசோதனை முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் சமுதாய நலக்கூடத்தில் போலீசாருக்கான 2 நாள் இலவச கண் பரிசோதனை முகாமை ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா துவக்கி வைத்தார்.புதுச்சேரி, கோரிமேடு போலீஸ் சமுதாய நலக்கூடத்தில் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் போலீசாருக்கான 2 நாள் இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று துவங்கியது.முகாமை ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா துவக்கி வைத்தார்.டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், எஸ்.பி.,க்கள் ரங்கநாதன், ரஞ்சனா சிங்., இன்ஸ்பெக்டர் கிட்லா சத்யநாராயணா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.நேற்று நடந்த முதல் நாள் பரிசோதனை முகாமில், போலீசில் பணியாற்றும் டிரைவர்கள் உள்ளிட்ட 152 பேருக்கு மருத்துவக் குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் கண்ணாடி தேவைப் படுபவர்களுக்கு, காவல்துறை மூலம் இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து, இன்றும்(2ம் தேதி) போலீசாருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை