மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்
09-Jan-2025
அரியாங்குப்பம், : என்.ஆர்.,காங்., 15ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு,காமராஜர் மக்கள் பேரவை சார்பில், வீராம்பட்டினம் சமுதாய நலக்கூடத்தில், இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. சாந்தகுமார் தலைமை தாங்கினார். செல்வகுமார் வரவேற்றார்.பேரவை தலைவர் முருகராஜ் முன்னிலை வகித்தார்.ஜோதி கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர், பொதுமக்களுக்கு,கண் பாதிப்பு தொடர்பாக பரிசோதனை செய்தனர். ஒருங்கிணைப்பாளர் சுப்புராயன், பரசுராமன், மணிகண்டன் மற்றும் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
09-Jan-2025