மேலும் செய்திகள்
இஸ்ரோ தலைவர் சுவாமி தரிசனம்
5 hour(s) ago
கூட்டுறவு கடன் சங்கத்தின் பொதுப்பேரவை கூட்டம்
5 hour(s) ago
கோதுமை வழங்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
5 hour(s) ago
மணக்குள விநாயகர் கல்லுாரியில் ழகரம் தமிழர் பெருவிழா
5 hour(s) ago
பாகூர் : கிருமாம்பாக்கம் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக, 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருமாம்பாக்கம் அடுத்துள்ள மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் மரங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டன. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சிவகுரு 41: என்பவர் உச்சிமேடு ஏரியை ஏலம் எடுத்துள்ளார். இந்நிலையில், கோவில் நிர்வாக பொறுப்பில் உள்ள அதே பகுதியை சேர்ந்த அய்யனார், கடந்த 25ம் தேதி சிவகுருவிடம் ஏலத் தொகையை கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இது குறித்து சிவகுரு அளித்த புகாரில், அய்யனார், அவரது சகோதரர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட 6 பேர் மீதும், அய்யனார் அளித்த புகாரில், சிவகுரு உள்ளிட்ட நான்கு பேர் மீதும் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago