உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

புவனகிரி: புவனகிரி அருகே 4 ஏரிகளில் நிரம்பியுள்ளதால் சுமார் 5,250 ஏக்கரில் சம்பா சாகுடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடலுார் மாவட்டத்தில், புவனகிரி பகுதியில் மேட்டூர் தண்ணீரை கொண்டு ஆண்டு தோறும் சம்பா மற்றும் நவரை சாகுடி மேற்கொள்கின்றனர். மேல்புவனகிரி ஒன்றியத்தில் நடப்பாண்டில் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா நடவு மற்றும் விதை நேர்த்தி செய்துள்ளனர். இப்பகுதி விவசாயிகள் ஆண்டு தோறும் மேட்டூர் தண்ணீரை பாசன கிளை வாய்க்கால்கள் மூலம் சொக்கன்கொல்லை, குமுடிமூலை, நத்தமேடு மற்றும் சாத்தப்பாடி ஏரியில் தேக்கியும், பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாயம் மேற்கொள்கின்றனர். இந்த நான்கு ஏரிகளில் சுமார் 5250 ஏக்கரில் விளைநிலங்கள் பாசனம் பெருகின்றன. விவசாயிகள் கோரிக்கையின் பேரில் என்.எல்.சி., மூலம் இந்த ஏரிகளின் கரைகள் பலத்தபடுத்தப்பட்டுள்ளதால் தற்போது ஏரிகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை