உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்

விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்

நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கத்தில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடந்தது.வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, பண்ணை தகவல் ஆலோசனை மையம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு, வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கினார். பாகூர் கோட்ட துணை இயக்குனர் குமாரவேல் புயலால் பாதித்த பயிர்களுக்கு வேளாண் விஞ்ஞானிகள் வழங்கிய ஆலோசனைகளை விளக்கினார்.காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் பூச்சியியல் வல்லுநர் மணிமேகலை நெற்பயிரை தாக்கும் பூச்சிகள், அதனை சரி செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் சரோஜா நெற்பயிரில் பூச்சியின் மேலாண்மை குறித்து பேசினார். ஏற்பாடுகளை வேளாண் ஊழியர்கள் குமணன், கந்தசாமி செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்லமுத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை