மேலும் செய்திகள்
மகள் மாயம் தந்தை புகார்
10-Jun-2025
மகள் மாயம் தந்தை புகார்
06-Jul-2025
புதுச்சேரி: வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் மகள் ஆனந்தி, (எ) விஜயலட்சுமி, 19, இவர் நேரு வீதியில் உள்ள, பேன்சி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது தந்தை, புதுச்சேரியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தந்தையுடன் அவர் கடந்த 1ம் தேதி, வேலைக்கு வந்தார். வேலையை முடித்து விட்டு, தந்தையுடன் அவர் ஒன்றாக பஸ்சில் செல்வது வழக்கம். அன்றைய தினம் பஸ் ஸ்டாண்டில், அவரது தந்தை காத்திருந்தார். வேகு நேரமாகியும் அவர் வராததால், கடைக்கு சென்று, கேட்டார். அவர் வேலைக்கு வரவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-Jun-2025
06-Jul-2025