பெண் தொழிலதிபர் பா.ஜ.,வில் இணைந்தார்
புதுச்சேரி : புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஹேமாவதி சண்முகம், மாநில தலைவர்முன்னிலையில் பா.ஜ., கவில் இணைந்தார். புதுச்சேரி பா.ஜ., மாநில மகளிர் அணி தலைவி தாமரைச்செல்வி , பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் மற்றும் நெடுங்காடு தொகுதி பா.ஜ., பிரமுகர் டாக்டர் விக்னேஸ்வரன் முன்னிலையில் காமராஜர் நகர் தொகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஹேமாவதி சண்முகம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் இணைந்தார்.