மேலும் செய்திகள்
மூதாட்டி தற்கொலை
13-Oct-2026
காரைக்கால்: உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி குமாரபிள்ளை தெருவை சேர்ந்த சேகர். கூலி தொழிலாளி, இவரது மனைவி மலக்கொடி, 35; இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது மலக்கொடி படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில் கோட்டுச்சேரி இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றார்.
13-Oct-2026