உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீன்வளத்துறை அதிகாரிக்கு மிரட்டல்: மீனவர் மீது வழக்கு

மீன்வளத்துறை அதிகாரிக்கு மிரட்டல்: மீனவர் மீது வழக்கு

புதுச்சேரி: மீன் வளத்துறை அதிகாரி அளித்த புகாரின்பேரில், இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.வம்பாக்கீரப்பாளையம், முத்துமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தேசிங்கு. இவரது தோழர் மீனவன் காப்போம் மக்கள் இயக்கம் செல்வநாதன். இருவரும் கடந்த 27ம் தேதி தேங்காய்த்திட்டு துறைமுக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறைக்கு சென்று, அங்குள்ள மீன்வளம் உதவி ஆய்வாளர்குருமூர்த்தியிடம் தங்களின் படகை பதிவு செய்யும் விண்ணப்பத்தின் நிலை குறித்து விசாரித்தனர்.அப்போது குருமூர்த்தி சில சந்தேகம் எழுப்பினார். அதனால் ஆத்திரமடைந்த செல்வநாதன், இந்த பைலை உடனடியாக முடித்து தரவில்லை எனில், ரூ. 5 லட்சம் லஞ்சம் கேட்பதாக போலீசில் புகார் தருவேன் என மிரட்டியதாகவும், தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக குருமூர்த்தி முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.செல்வநாதன் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை