உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீன்பிடி தடைக்காலம் முடிவு: யாகத்தில் முதல்வர் பங்கேற்பு

மீன்பிடி தடைக்காலம் முடிவு: யாகத்தில் முதல்வர் பங்கேற்பு

புதுச்சேரி : மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால், விசைப் படகுகள் உரிமையாளர்கள் நடத்திய சிறப்பு யாகம் நடந்தது.வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டது.இந்த தடைக்காலத்தில், படகுகளை சீரமைக்கும் பணி மற்றும் வலை பின்னுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். மேலும், தடைக் காலத்தின்போது, பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத மீன்பிடி விசைப் படகுகளை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில், மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.இந்நிலையில், இன்று 14ம் தேதியுடன், தடைக்காலம் முடிவடைவதால், படகு உரிமையாளர்கள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில், உள்ள விசைப்படகுகளுக்கு நேற்று பூஜை போட்டு சிறப்பு யாகம் நடத்தினர். இந்த யாகத்தில், முதல்வர் ரங்கசாமி, பாஸ்கர் எம்.எல்.ஏ., உட்பட மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ