உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரவுடி கொலை வழக்கில் மேலும் ஐந்து பேர் கைது

ரவுடி கொலை வழக்கில் மேலும் ஐந்து பேர் கைது

வில்லியனுார்: வில்லியனுார் அருகே நடந்த ரவுடி கொலை வழக்கில் மேலும் ஐந்து பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டில் கடந்த 9ம் தேதி ரவுடி முரளி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப் பதிந்து, ஆத்துவாய்க்கால்பேட் தீனா, சரத், விஷ்வா, அரவிந்தன், அரும்பார்த்தபுரம் பிரதீப் ஆகிய ஐந்து பேரை நேற்று முன் தினம் சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட சாமியார்தோப்பு பரணிதரன், 27; ராஜசேகர் மகன் சவுத்ரி, 28; கணுவாப்பேட்டை கார்த்திகேயன் மகன் கோகுல்ராஜ், 26; ஆத்துவாய்க்கால்பேட் பாபு மகன் வினித், 18; கோட்டைமேடு சூசைராஜ் மகன் ஸ்ரீராம், 26, ஆகியோரை இன்று (நவ.,14) போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஐந்து பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி