உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பங்குனி உத்திரம் கொடியேற்றம்

பங்குனி உத்திரம் கொடியேற்றம்

பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்துள்ள வள்ளுவர்மேடு கிராமத்தில் பழமைவாய்ந்த தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 115ம் ஆண்டு பங்குனி உத்திர காவடி பூஜை விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனையொட்டி, காலை 9.00 மணிக்கு காட்டுக்குப்பம் ஏரிக்கரை தாங்கலில் இருந்து பிரம்ம கலசம், சக்தி கரகம் எடுத்து வந்து மதியம் 1.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 10ம் தேதி காலை 10.30 மணிக்கு 108 சங்காபிஷேகம், இரவு 7.00 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேத திருமுருக சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்வான காவடி பூஜை வரும் 11ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, காலை 9.00 மணிக்கு பால் குட ஊர்வலமும், மதியம் 2.00 மணிக்கு காவடி பூஜையும் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை