உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீவனப்புல் வளர்ப்பு பயிற்சி முகாம் 

தீவனப்புல் வளர்ப்பு பயிற்சி முகாம் 

நெட்டப்பாக்கம் : வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், பால் உற்பத்தி பெருக்கும் வகையில் தீவனப்புல் வளர்ப்பு மற்றும் அடர் தீவனம் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.கரையாம்புத்துார் உழவர் உதவியகம் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, வேளாண் அலுவலர் புவனேஸ்வரி வரவேற்றார். பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் சிவபெருமான், துணை வேளாண் இயக்குனர் குமரவேல் தலைமை தாங்கினர். கால்நடை மருத்துவர்கள் சம்பத்குமார், சிவசங்கரி ஆகியோர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.உதவி வேளாண் அலுவலர் கங்காதுரை ஏற்பாடு களை செய்திருந்தார்.ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ