உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி நைனார்மண்டபம் மூகாம்பிகை நகர், 7வது குறுக்கு தெருவில் அமைந்துள்ள திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில், தினசரி அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது. விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பங்கேற்று துவக்கி வைத்தார். கோவில் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் மூலம் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை வேளையும், மற்ற நாட்களில் மாலையில் மட்டும் அன்னதானம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ