உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கு... மவுசு குறைந்தது;  334 சீட்டுகளுக்கு 101 மட்டுமே விண்ணப்பம்

 பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கு... மவுசு குறைந்தது;  334 சீட்டுகளுக்கு 101 மட்டுமே விண்ணப்பம்

புதுச்சேரி: பி.டெக்., இரண்டாமாண்டில் நேரடியாக லேட்ரல் என்ட்ரி முறையில் சேர்ந்து படிப்பதற்கு வெறும் 101 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதால், பெரும்பாலான இடங்கள் காலியாகவே வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்த மாணவர்களுக்காக, 10 சதவீத இடங்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் ஆண்டு தோறும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவர்கள் பி.டெக்., படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் மொத்தம் 334 பி.டெக்.,லேட்ரல் என்ட்ரி சீட்டுகள் உள்ளன. இந்த இடங்களுக்கு கடந்தாண்டு 236 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.இந்தாண்டு, பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் சென்டாக் மூலம் பெறப்பட்டு, அனைத்து பரீசிலனைகளும் முடிந்துள்ள சூழ்நிலையில் தற்போது வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெறும் 101 பேர் விண்ணப்பித்துள்ளதாக வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதனால் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் எந்தவித போட்டியும் இல்லாமல் சீட் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதோடு, 233 சீட்டுகள் நிரம்பாமலே போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெறும் 101 பேர் விண்ணப்பித்து இருந்தாலும் அதில் எத்தனை பேர் சீட் கிடைத்த கல்லுாரியில் சேருவர் என்று தெரியவில்லை.எனவே மாணவர் சேர்க்கையில் கல்லா கட்ட நினைத்த கல்லுாரிகளும் கலக்கமடைந்துள்ளன. கவுன்சிலிங்கிற்கு பிறகு

ஆட்சேபனை இருந்தால்....

சென்டாக் வெளியிட்டுள்ள பி.டெக்., லேட்ரல் என்ட்ரி வரைவு தரவரிசை பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் வரும் 12ம் தேதி மாலை 5:00 மணிக்குள் தங்களுடைய லாகின் மூலம் ஸ்டேஷ்போர்டில் தெரிவிக்கலாம். பாட பிரிவு முன்னுரிமைகளை வரும் 16ம் தேதி மாலை 5:00 மணிக்குள் தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ