உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என் வாழ்நாளில் செய்த உலக மகா தவறு மனம் திறந்த மாஜி முதல்வர் நாராயணசாமி

என் வாழ்நாளில் செய்த உலக மகா தவறு மனம் திறந்த மாஜி முதல்வர் நாராயணசாமி

திருக்கனுார்: புதுச்சேரி மாநில காங்., மேற்கு மாவட்டத்திற்கு உட்பட 5 தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருக்கனுாரில் நடந்தது.மாவட்ட தலைவர் பழனிராஜா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தனுசு வரவேற்றார். மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, பெத்தபெருமாள், முன்னாள் எல்.எல்.ஏ., அனந்தராமன், சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், மாநில செயலாளர்கள் முத்துரங்கம், சுரேஷ், செந்தில், வட்டாரத் தலைவர் பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், 'புதுச்சேரி, தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலில், தென்மாநிலங்களில் ஒரு மாநிலத்தையாவது பிடிக்க வேண்டும் என, பா.ஜ., புதுச்சேரியை குறி வைக்கும். லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுகளை வாங்கியதால், கட்சியினர் அலட்சியமாக இருக்க கூடாது. சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது.என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சியின் ஊழல் பட்டியலை கிராமம், கிராமமாக கொண்டு சென்று, மக்களிடம் தெரிவிக்க வேண்டியது கட்சியினர் பொறுப்பு.ரங்கசாமியை முதல்வராக்கியதும், நமச்சிவாயத்தை காங்., தலைவராக்கியதும் என் வாழ்நாளில் செய்த உலக மகா தவறு. புதுச்சேரியில் பெரும்பான்மை சமூகமான வன்னியர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தது காங்., கட்சி தான். நான் பல வன்னியர்களை அடையாளப் படுத்தினேன். என்னை வன்னியர் எதிரி என்கின்றனர்.இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு வன்னியர்கள், ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்களால் வன்னியர் சமூகத்திற்கு என்ன பயன். இந்த ஆட்சியை துாக்கி எறிந்து அனைவருக்கும் பரவலாக அதிகாரம் கிடைக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை