உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி, கல்லுாரி கட்டடங்கள் ஆய்வு முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் கோரிக்கை

பள்ளி, கல்லுாரி கட்டடங்கள் ஆய்வு முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் கோரிக்கை

புதுச்சேரி: அரசு பள்ளி கல்லுாரி கட்டடங்களை பராமரிக்க குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி அரசு கலை, அறிவியல் கல்லுாரி கழிவறை தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். சராசரியாக ஒரு வீடு தரமாக கட்டினால் 50 ஆண்டுகள் வரை உறுதியாக இருக்கும். ஆனால் அரசு கட்டடங்கள் ஊழல்கள் நிறைந்துள்ளதால் 10 ஆண்டுகள் தாங்குவது அரிதாக உள்ளது. இந்த விஷயத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இணைந்து செயல்படுவதல் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுகடைகளும் ஏசி செய்யப்பட்டு அருங்காட்சியகம் போன்றும், அரசு பள்ளிகள் மட்டும் மாட்டு கொட்டாய் போன்று காட்சியளிக்கிறது. எது முக்கியம் என்று அரசுக்கு தெரியவில்லை.காமராஜர் ஆட்சி என்று சொல்லும் அனைவரும் காமராஜர் வரலாற்றை படிக்க வேண்டும். நிதி சிக்கனத்தை கற்க வேண்டும். அரசு பள்ளி கல்லுாரி கட்டடங்களை பராமரிக்க குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். பல பகுதிகளில் போடப்பட்ட சாலை தரமற்றதாக உள்ளது. இவற்றை கவர்னர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி