உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலி பட்டா வழக்குகளை விசாரிக்க முன்னாள் எம்.எல்.ஏ., கோரிக்கை

போலி பட்டா வழக்குகளை விசாரிக்க முன்னாள் எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி : நிலுவை போலி பட்டா வழக்குகளை உடனடியாக விசாரிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பல ஓட்டல்கள் அரசியல்வாதிகளின் பலத்துடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஆறுகள் பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு நடந்து ஆற்று பாதைகள் சுருங்கிபோய் உள்ளது. நீர் வழி பாதைகள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் உள்ள நில வரைபடம், பட்டா ஆகியவற்றின் மூலம் புதுச்சேரியில் உள்ள ஏரி, குளங்களை நேர்மையான அதிகாரி மூலம் கவர்னர் ஆய்வு செய்து மீட்க வேண்டும். புதுச்சேரியில் விதிகள் பலவகையில் மீறப்பட்டு வருகின்றது.அனைத்து சமூக விரோத செயல்களை பயமின்றி செய்து வருபவர்கள் மீது கவர்னர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த காலங்களில் நிலுவையில் உள்ள பல போலி பட்டா வழக்குகளை உடனடியாக விசாரிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும். கடற்கரை பகுதியில் பல ஏக்கர் நிலங்கள் அரசு குத்தகை விட்டுள்ளது. குத்தகையை மீறி பல கட்டடங்கள் கட்டி அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !