மேலும் செய்திகள்
கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம்
26-Feb-2025
பாகூர் : பாகூர் அருகே காசு வைத்து சூதாடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.பாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை, கீழ் பரிக்கல்பட்டு சந்திப்பில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு கும்பல், காசு வைத்து சீட்டு விளையாடுவதாக தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தப்பியோட முயன்றவர்களை மடக்கி, விசாரித்தனர். கீழ்ப்பரிக்கல்பட்டு வாசுதேவன், 50; சின்ன ஆராய்ச்சிக்குப்பம் வாசுதேவன், 29; அருண்பாண்டியன், 25; மேல்பரிக்கல்பட்டு ராஜாராம், 39, ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள், 7 ஆயிரத்து 730 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
26-Feb-2025