மேலும் செய்திகள்
போதை கணவர் தற்கொலை மிரட்டல்
07-Sep-2025
வில்லியனுார் : வில்லியனுார் - கூடப்பாக்கம் மெயின் ரோடு ரயில்வே கேட் அருகேபனங்கல் ரெஸ்டோ பார் உள்ளது. இந்த பாரில் நேற்று முன்தினம் இரவு மது அருந்திய ஒரு கும்பல் ரகளையில் ஈடுபட்டது. தகவலறிந்த வில்லியனுார் போலீஸ் ஏட்டுகள் கஜேந்திரன் மற்றும் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ரகளையில் ஈடுபட்டவர்கள் போலீசாரை ஆபசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். வில்லியனுாரை சேர்ந்த பாண்டா, 31; நிர்மல்ராஜ், 25; ஆரியப்பாளையம் செல்வகுமார், 25; வடமங்கலம் ஜெய்கணேஷ், 26, என, தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
07-Sep-2025