உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேலை பெற்று தருவதாகக் கூறி ரூ.57.89 லட்சம் மோசடி

வேலை பெற்று தருவதாகக் கூறி ரூ.57.89 லட்சம் மோசடி

புதுச்சேரி : வெளிநாட்டில் வேலை இருப்பதாகக் கூறி ரூ. 57.89 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். புதுச்சேரி வள்ளலார் சாலையை சேர்ந்தவர் கார்த்திகேயன், 49; இவரிடம் மொபைல் போனில் பேசிய மர்ம நபர் ஒருவர் வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை இருப்பதாக கூறினார். அதை நம்பி அவர், தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை தவணை முறையில் ரூ. 57.89 லட்சத்தை ஆன்லைன் வழியாக அனுப்பினார். அதன் பின்னர் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இதனால் அவர் ஏமாற்றப்பட்டதை அறிந்து கார்த்திகேயன் அதிர்ச்சியடைந்தார்.புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை