மேலும் செய்திகள்
தி.மு.க., அரசை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்
21-Jul-2025
புதுச்சேரி : புதுச்சேரி காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் சார்பில், இலவச ரத்த தான முகாம் நடைபெற்றது. வில்லியனுார் சுல்தான்பேட்டையில் நடந்த முகாமிற்கு சங்க தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். முகாமை, எதிர்க்கட்சி தலைவர் சிவா துவக்கி வைத்தார். செயலாளர் சுரேஷ்குமார், சேர்மன் மருதமாலப்பன் முன்னிலை வகித்தனர். இதில், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் அருள்விசாகன், தி.மு.க., தொகுதி செயலாளர் மணிகண்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் லோகையன், பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜ், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கலிமுல்லா உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், தன்னார்வலர்கள் பலர் ரத்த தானம் செய்தனர்.
21-Jul-2025